பட்டப்பகலில் அத்துமீறல்: உல்லாச ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த பொதுமக்கள்: பெற்றோர்கள் எதிர்ப்பு குமரி அருகே திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஷைனி (வயது 19). இவருக்கும், தக்கலையைச் சேர்ந்த மதீஷ்குமார் (26) என்பவருக்கும் பழக்கம் இருந்தது. ஷைனியின் தந்தை கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். தாயார் முந்திரி ஆலையில் வேலை பார்க்கிறார். பெரும்பாலான நேரங்களில் ஷைனி வீட்டில் தனியாக இருப்பார். இதை பயன்படுத்திக் கொண்ட மதீஷ்குமார், அடிக்கடி ஷைனியின் வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார். பட்டப்பகலிலேயே அவர்கள் இப்படி அத்துமீறி நடந்து கொண்டது அக்கம்பக்கத்தினரை முகம் சுளிக்க வைத்தது. இதனால் கையும், களவுமாக பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க அந்த பகுதியினர் முடிவு செய்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை (27.07.2012) காலை வீட்டுக்குள் தனிமையில் இருந்த மதீஷ்குமாரையும், ஷைனியையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் 2 மாலை வாங்கி வந்து அவர்களை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினர். மதீஷ்குமாரும், ஷைனியும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் திருவட்டார் போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 2 பேருடைய பெற்றோரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் 2 பேருடைய பெற்றோரும் மதிஷ்குமார்-ஷைனி திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதையடுத்து ஷைனி குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதீஷ்குமார் திருவட்டார் போலீஸ்நிலையத்தில் தங்கவைக்கப்பட்டார். இன்று 2-வது நாளாக அவர்களது உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கிறார்கள்.