துணை ஜனாதிபதி தேர்தல்: அமீத் அன்சாரி நாளை மனு தாக்கல் செய்கிறார்
துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துணை ஜனாதிபதி அமீத்அன்சாரிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமீத் அன்சாரி நாளை (18-ந் தேதி) வேட்பு மனு தாக்கல் செய்வார் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.