ரேபிஸ்' பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற ஜெயலலிதா உத்தரவு
வெறிநாய் கடியால் உயிரிழப்பது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. "நாய்களைக் கொல்லக்கூடாது' என சட்டமிருப்பதால், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், "ரேபிஸ்' பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பு ஊசி போட, கால்நடைத் துறையில் தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது.