3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ஏ.கே. குமரகுரு நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடல்சார் ஆராய்ச்சித்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஜெனிடிக்ஸ் துறையின் தலைவரான பேராசிரியர் பி.குணசேகரன், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, கொடைக்கானல் அன்னைதெரசா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றிய மணிமேகலை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் ரோச்சையா பிறப்பித்துள்ளார்.