பொறம்போக்கு இடங்களில் அதிமுக கொடி : பாலபாரதி குற்றசாட்டு
கடந்த 2ந்தேதி திருவண்ணாமலையில் சமூகசேவகர் ராஜ்மோகன்சந்திரா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன், அவரது அண்ணன் செல்வம் உட்பட 4 பேர் நீதிமன்றத்தில் சரண்டரானார்கள். 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் இன்னும் சிலர் குற்றவாளிகளாக உள்ளார்கள். அவர்கள் தான் ஏவிவிட்டவர்கள். அவர்கள் பெரும் பொறுப்பில் உள்ளதால் கைது செய்ய தயங்குகிறார்கள். அவர்களையும் கைது செய்ய வேண்டும் என கேட்டு திருவண்ணாமலை மாவட்ட சி.பி.எம் தோழர்கள் மா.செ வீரபத்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் கலந்துக்கொண்ட பாலபாரதி எம்.எல்.ஏ, ஒருவர் நான் தான் கொலை செய்தேன் என நீதி மன்றத்தில் சரணடைந்தால் அதன் பின்னால் வேறு ஒரு பெரும் புள்ளி இந்த சம்பவத்தில் உள்ளார் என்பதே பொருள். இந்த கொலைக்கு பின்னால் நீதித்துறையில் இருப் பவர், காவல்துறையில் பொறுப்பில் இருப்பவர் என இரண்டு பேர் சம்மந்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
காவல்துறை பொதுமக்களை ஏமாற்றுவதை போல எங்களை ஏமாற்ற முடியாது. ரவுடிகளுக்கும் - காவல்துறை - அரசியல்வாதிகள் இடையே ஒரு கூட்டணி உள்ளது இது உடைந்தால் தான் மக் களுக்கு நல்லது நடக்கும் என்றார்.
\அவர் மேலும், இந்த ஆட்சியில் பொறம்போக்கு இடங்களில் அண்ணா படம் போட்ட அதிமுக கொடிகள் பறக்கின்றன. இது தான் இந்த ஆட்சியின் சாதனை என ஆளும்கட்சியை விமர்ச்சித்தார்.