ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. நீக்கம்
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ். விஜயாவைச் சந்தித்த எம்.எல்.ஏ. கோடலி ஸ்ரீவெங்கடேஸ்வர ராவ் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து (டிடிபி) நீக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்திப்பு நடந்த சில நிமிடங்களுக்குள் இது குறித்த அறிவிப்பை டிடிபி கட்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
விஜயாவைச் சந்தித்த பிறகு, சிறையில் உள்ள அவரது மகனும் கடப்பா எம்.பி.யுமான ஜெகன் மோகன் ரெட்டியையும் ராவ் சந்தித்தார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வர ராவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்குத்தான் இந்த சந்திப்பு நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.