நித்யானந்தா பெற மறுத்த நோட்டீஸ் அறிவிப்பை நாளிதழில் விளம்பரப்படுத்த கோர்ட் உத்தரவு
நித்யானந்தா பெற மறுத்ததாக கூறப்படும் நோட்டீஸ் அறிவிப்பை, விளம்பரப்படுத்துமாறு,' மதுரை முதன்மை மாவட்ட கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி ராஜசேகரன் உத்தரவிட்டார்.
மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து,சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் மணிவாசகம், கும்பகோணம் தியாகராஜன் ஆகியோர், மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். கடந்த ஜூன் 24ல் நடந்த விசாரணையில், "அருணகிரிநாதர், நித்யானந்தா ஆகியோர், ஜூலை 9ல் விளக்கம் அளிக்க, நோட்டீஸ் அனுப்பி,' நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்த விசாரணையில், "அருணகிரிநாதர் நோட்டீஸ் பெற்றுக்கொண்டதாகவும், நித்யானந்தா நோட்டீஸ் பெற்று, அதை திருப்பி அனுப்பியதாகவும்,' மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, "நித்யானந்தா தொடர்பான நோட்டீஸ் அறிவிப்பை, நாளிதழில் விளம்பரப்படுத்துமாறு,' நீதிபதி ராஜசேகரன் உத்தரவிட்டார்.