தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கடந்த ஜூலை 1ம் தேதி சிறை பிடிக்கப்பட்ட 10 தமிழக மீனவர்களை இன்று (09.07.2012) இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை செய்து விடுதலை செய்துள்ளது என்று தமிழக மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் கூறினார்கள்.
படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் இன்று அல்லது நாளைக்குள் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடலோரப் படையினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள் என்று தமிழக மீன்வளத்துறையின் உதவி இயக்குநர் ஏ. கார்த்திகேயன் இன்று நிருபர்களிடம் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற சமயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மன்னார் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் அந்தோணி பிள்ளை ஜூட்டிசன் தனது தீர்ப்பின்போது தமிழக மீனவர்களை எச்சரித்தார்.