அதிகாரிகள் அதிரடி : 300 வீடுகள் இடித்து தரைமட்டம்
நெல்லை தாமிரபரணி கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட வீடுகள் இன்று 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
நெல்லை மாநகரில் தாமிரபரணி ஆறு சாக்கடையால் மாசுபட்டும், ஆக்கிரமிப்புகளால் சூழப்பட் டும், குப்பை கூளங்கள் நிறைந்தும் உயிரற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாக்கடைகளை தடுக்கவும் பல்வேறு காலகட்டங்களில் பொதுப் பணித்துறை,வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுத்து வரு கிறது.
குறிப்பாக நெல்லை சிந்துபூந்துறை முதல் குறுக்குத்துறை வரையிலான ஆற்றங்கரை குடியிருப் புகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இங்கு ஆற்றினுள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 791 வீடுகளில் 472 வீடுகளுக்கு ரெட்டியார்பட்டி நேருநகர் மற்றும் சுத்தமல்லி பகுதிகளில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டன. மற்றவர்களையும் ஆற்றங்கரையில் இருந்து வெளியேறுமாறு பலமுறை அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் அவர்கள் வெளியேறவில்லை. வெளி யேறி மாற்று வீடுகளில் குடியிருந்தவர்களும் மீண்டும் பழைய இடங்களுக்கு வந்து ஆக்கிரமித்தனர். இதனால் ஆற்றங்கரையை சுத்தப்படுத்தும் பணி வெகுவாக பாதித்தது. இம்முறை 15 நாட்களுக்கு முன்பே பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட் டீஸ் அனுப்பப்பட்டன. மேலும் தண்டரோ போட்டும் எச்சரிக்கை விடப்பட்டன. இதில் சிலர் மட்டும் வீடுகளை காலி செய்தனர்.
பெரும்பாலானோர் அதே இடத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமையில் மாநகராட்சி கமிஷனர் மோகன், போலீஸ் உதவி கமிஷனர் ராஜமன்னார், இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், பர்னபாஸ், ஜெபராஜ், தாசில்தார் கதிரேசன், வட்ட துணைத்தாசில்தார் பரமசிவன், வருவாய் ஆய்வாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 319 வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஏற்கனவே முறையான அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் மத்தியில் பெரிதான எதிர்ப்புகள் எதுவும் கிளம்பவில்லை. ஆனாலும் சுலோகால் என் பவர் சார்பில் கோர்ட்டில் தடை ஆணை பெற்றதாக வழக்கறிஞர் ஒருவர் மூலம் தகவல் தரப்பட்டது.
ஆனால் அவரது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கவில்லை. ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சமாதிகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.