மாடுகள் விஷம் வைத்து சாகடிப்பு
களக்காடு நாடார் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (49). இவருககு சொந்தமான தோட்டம் தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு பகுதியில் உள்ளது. இங்கு அவர், மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் 2 மாடுகள் திடீரென்று சுருண்டு விழுந்து இறந்தன.
இதுகுறித்து சுரேஷ் களக்காடு போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் முத்தையா சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளின் உடல்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இதில் மாடுகள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவைகளுக்கு விஷம் வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.