செந்துறை: திமுகவினர் 360 பேர் கைது
திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.
அதன்படி செந்துறையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். திமுக ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 360 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.