தி.மு.கவினரின் போராட்டத்தையொட்டி சென்னை நகர போக்குவரத்தில் மாற்றம்
தி.மு.க வினரின்மீது பொய் வழக்குகளைப் போட்டு சிறைகளை நிரப்பிவரும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்து இன்று (04/07/2012) சென்னையில் சில இடங்களில் தி.மு.க. அறவழிப் போராட்டங்களை நடத்துகிறது.
அதைத் தொடர்ந்து சென்னை போலீசார் 03/07/2012 வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 22 இடங்களில் தி.மு.கவினரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது நடக்கும். இந்தப் போராட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் கலந்து கொள்ளவில்லை. அவரது மகனும் தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் கலந்து கொள்கிறார். சி.பி.ஐ. கோர்ட்டின் முன்அனுமதியுடன் கனிமொழி எம்.பி. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இதைத் தொடர்ந்து, சைதை பனகல் மாளிகை, டி.எம்.எஸ். வளாகம், எழிலகம் மற்றும் போர் நினைவுச் சின்னம் வழியாக அலுவலகம் செல்வோர் காலை 9 மணிக்கு முன்னதாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.