தெருவில் எச்சில் துப்பியதால் ஆத்திரம் : பெண்கொலைதிருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ளது பரஞ்சேர்வழி கிராமம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது பொடாரம்பாளையம் கிராமம். இந்த ஊரை சேர்ந்த லோகநாதன் எனோவரின் மனைவி மரகதம் (வயது-60) அதே வீதியில் குடியிருக்கும் லோகநாதனின் உறவினர்களான நடராஜ் என்பவரின் மனைவி சரஸ்வதியும், அவரது மகன் பாஸ்கரன் (வயது-26) வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வீதியில் சரஸ்வதி நடந்து சென்று கொண்டிருந்த போது, வீட்டுக்குள் இருந்த மரகதம் வீதியில் எச்சில் துப்பியுள்ளார்.அது எதிர்பாராத விதமாக, நடந்து சென்ற சரஸ் வதியின் காலின் மீது பட்டது. இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, வாய்ச்சண்டையாக மாறியது.அப்போது, அங்கு வந்த சரஸ்வதியின் மகன் பாஸ்கரன், சண்டை நடப்பதை பார்த்து ஆத்திரமடைந்து, கீழே கிடந்த கட்டையை எடுத்து மரகதத்தின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.இதில் மண்டை உடைந்த மரகதம், ரத்த வெள்ளத்தில் சரிந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மரகதத்தை அடித்து கொன்ற பாஸ்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.