சென்னை மெரினா கடற்கரையில் ராக்கெட் லாஞ்சர் சிக்கியது
சென்னை மெரினா கடற்கரையில் இன்று (25.06.2012) இரவு ராக்கெட் லாஞ்சர் ஒன்று கரை ஒதுங்கியது. நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர்களான மணிபாரதி, விஜய், ஜெகதீஷ், எவினேஷர் ஆகியோர் பார்த்துள்ளனர். உடனடியாக அங்கிருந்த சாக்குப் பையால் அதனை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் மெரினா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மெரினா போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அது ராக்கெட் லாஞ்சர் என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ராக்கெட் லாஞ்சர் இருக்கும் இடத்திற்கு வந்து அதனை ஆய்வுக்கு கொண்டு சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் மீனவர்கள் திரளாக கூடிவிட்டனர்.