நித்தி - அருணகிரி கோர்ட்டில் ஆஜராக நோட்டீஸ்
சென்னையைச்சேர்ந்த தியாகராஜன் மதுரை மாவட்ட நிதிமன்றத்தில் இரு வழக்கு தொடர்ந்தார்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நித்தியானந்தா, மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக பதவியேற்றது சைவ சமயத்திற்கும் தமிழுக்கும் அவப்பெயர் ஏற்படுத்திவிட்டது. எனவே அவர் இளைய ஆதீனமாக நீடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், கர்நாடகாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நித்தியானந்தாவும் அவரது சீடர்களும் மதுரையில் நிரந்தரமாக தங்கக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஜூலை 9ம் தேதி அருணகிரியும், நித்தியும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.