கோவையில் கேரள முதல்வர் உருவபொம்மையை எரிக்க முயற்சி: 5 பேர் கைது
கோயமுத்தூரில் கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்வதைக் கண்டித்து அம்மாநில உம்மன் சாண்டி உருவபொம்மையை எரிக்க முயன்ற 5பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் குடிநீர் ஆதாரத்தைத் திருடும் செயலில் கேரளம் இறங்கியுள்ளதாகக் கூறி, சமத்துவ முன்னணி அமைப்பினர் கோவை ஆட்சியர் அலுவலகம் எதிரே கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களைத் தடுத்த போலீஸார், 5 பேரைக் கைது செய்தனர். இதனால், அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.