ரயில் மோதி கல்லூரி மாணவி பலி! செல்போன் பேச்சு உயிரை பறித்தது!
செல்போனில் பேசியபடி சென்ற கல்லூரி மாணவி, ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதி பலியானார்.
அரக்கோணம் அடுத்த கீழ்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நேசராஜ். இவரது மகள் ஸ்டெல்லா ஜூலியட் (வயது 23). கல்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார். சொந்த வேலையாக (22.06.2012) திருவள்ளூர் வந்த இவர், வேலை முடிந்து அரக்கோணம் செல்வதற்காக செல்போனில் பேசியபடி, அங்குள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.