பா.ஜனதா காரிய கமிட்டி இன்று கூடுகிறது
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக அக்கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. அக்கூட்டணியில் உள்ள சிலர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்றிரவு (18.06.2012) 9 மணியளவில் கட்சித் தலைவர் நிதின் கட்காரியின் இல்லத்தில் நடைபெறுகிறது. அப்போது ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.