அதிமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக!
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் 3 வாக்குச்சாவடிகளில் அதிமுகவை விட தேமுதிக வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.ஆர்.கார்த்திக்தொண்டைமான் 71 ஆயிரத்து 498 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த தேமுதிக வேட்பாளர் என். ஜாகிர் உசேன் 30 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் 224 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் நகர் பகுதியான கலீப்நகர் பகுதியில் 89, 91, 92 (எம்) ஆகிய மூன்று வாக்குச்சாவடியில் 1504 வாக்குகள் பதிவாகின. இதில் அதிமுக 606 வாக்குகளும், தேமுதிக 823 வாக்குகளும் பெற்றுள்ளது. இதனால் நகரில் கனிசமான வாக்குகளைப் பெற்ற தேமுதிக, இம்மூன்று வாக்குச்சாவடியிலும் வெற்றி பெற்றுள்ள அதிமுகவைவிட 217 வாக்குகள் தேமுதிக அதிகம் பெற்றுள்ளது.