ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும்: நிதின் கட்கரி
2009 மக்களவைத் தேர்தலில் முறைகேடு செய்ததாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டதையடுத்து அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் நிதின் கட்கரி, முறைகேடு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கை ரத்துசெய்ய மறுத்த நீதிமன்றம், விசாரணையை அவர் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே சிதம்பரம் குற்றம்புரிந்துள்ளவர் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்