அண்மைச் செய்திகள்
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி || இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு || உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை || காவிரிப் பிரச்சனையில் அனைவரும் ஒருமித்து எழுந்து குரல் கொடுக்க வேண்டும்: வைகோ || விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு || மனைவி குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை || அரக்கோணம் பரபரப்பு : சிவப்பு சிக்னலில் ரயிலை நிறுத்தாமல் சென்றார் டிரைவர் || சென்னை பல்கலை 155வது பட்டமளிப்பு விழா || ஓய்வு பெற்றார் விநோத்ராய் || திருத்தணியில் லஞ்சம்: பள்ளிப்பட்டு பெண் தாசில்தார் கைது || சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான் || திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை : திருமாவளவன் || மதுராந்தகம் : அரசு பஸ் மரத்தில் மோதி குழந்தைபலி ||
புதன்கிழமை, 6, ஜூன் 2012
முஷரப் இல்லாமலேயே விசாரணை நடத்த மனு
......................................
கொசு என்கிறீர்கள்; கொசுவை அடிக்க ஏன் இத்தனை ஆயிரம் பேர் வருகிறீர்கள்? : விஜயகாந்த் பேச்சு
......................................
ஜெயலலிதா மீது வழக்கு தொடருவேன் : விஜயகாந்த்
......................................
புதிய தலைமை தேர்தல் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.எஸ்.சம்பத்?
......................................
இறுதிப்போட்டியில் பூபதி-சானியா ஜோடி
......................................
ஆஸி’க்கு தப்பி செல்ல முயன்ற 135 இலங்கை தமிழர்கள் நெல்லை கொண்டு வரப்பட்டனர் ( படங்கள் )
......................................
தாய்-மகள் கொன்று புதைப்பு: மகன் கண்ணீர்
......................................
கோர்ட்டில் ஆஜராகி சென்ற பிரபல ரவுடி வெட்டிக்கொலை
......................................
மணல் கடத்திய டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்தது :டிரைவர் பலி
......................................
குற்றாலத்தில் சீசன் தொடங்கும் அறிகுறி
......................................
5 ஆண்டுகளில் பேஸ்புக் மறைந்துவிடும் : அதிர்ச்சி ரிப்போர்ட்
......................................
பிரேமலதா மீது போலீஸ் வழக்கு
......................................
கேரளாவில் 533 போலீசார் மீது கிரிமினல் வழக்கு
......................................
நித்தியும், ஆதீனமும் ஓய்வெடுக்க பெங்களூர் சென்றனர்
......................................
புதுக்கோட்டையில் விஜயகாந்த் பிரச்சாரம்
......................................
திமுக கூட்டம் : தேதி மாற்றம்
......................................
மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்
......................................
மேற்கு வங்கம் : வெயில் கொடுமைக்கு 67 பேர் பலி
......................................
ஆனந்துக்கு 2 கோடி பரிசு வழங்கினார் ஜெ.,
......................................
ஐஜேகேவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு
......................................
காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் கிராமம்
......................................
அனாதை நாய்களுக்கு ஆதரவு காட்டும் நடிகை, நடிகர்!
......................................
ஆதிமனிதன் ஆசியாவில்தான் தோன்றினான்;ஆப்பிரிக்காவில் இல்லை!
......................................
தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்வு
......................................
சசிகலா மனு18-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
......................................
ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் ராஜாபரமசிவம்
......................................
மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் : ராமதாஸ்
......................................
நான் சந்திப்பதை தடுப்பதற்காக வீரபாண்டி ஆறுமுகத்தை வேலூர் சிறைக்கு மாற்றிவிட்டனர் : கலைஞர் கண்டனம்
......................................
எப்படி இருந்த அணை இப்படி ஆயிருச்சே! ஆதங்கப்படும் மலைகாணி வாசிகள்
......................................
வீரபாண்டி ஆறுமுகம் வேலூர் சிறைக்கு மாற்றம்
......................................
ஆ. ராசா தமிழ்நாட்டுக்கு வர அனுமதி
......................................
அதிமுகவுக்கு டி.ராஜேந்தர் ஆதரவு
......................................
போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு
......................................
முத்தரையர் இளைஞர் பாசறை தேமுதிகவுக்கு ஆதரவு
......................................
5-வது நாளாக நீடிக்கும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
......................................
ஜீன் -9 : கலைஞர் தரைவழி பயணம் - ஜெயலலிதா வான்வழி பயணம்
......................................
சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்புகள் வீசிய கட்சியினர்
......................................
அதிகாரம் இல்லாவிட்டால் வருவோம்'' -பிறந்தநாளில் உ.பி.க்கள்!
......................................
அனுஷா பார்ட்டியில் யுவராஜ்சிங் ( படங்கள் )
......................................
விஜயகாந்த் இன்று புதுக்கோட்டையில் பிரச்சாரம்
......................................
குண்டக்கல் காப்பு காட்டில் தஞ்சம் புகுந்த யானைகள்
......................................
கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள் துவங்கினால் முதலீடு, பயிற்சி உள்ளிட்டவற்றில் மானியம்
......................................
அரசினர் மாணவர் விடுதிகளில் இலங்கை தமிழர்களுக்கு இடம்
......................................
லெனின் கருப்பனுக்கு ஜாமீன் கிடைத்தது
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமின்
......................................
இட்லி வாங்குவதில் தகராறு : வாகனங்கள் சூறை - 19 பேர் கைது
......................................
டிவி நிகழ்ச்சியின் மூலம் மகள் அம்பலப்படுத்தினார் : எலும்புக்கூடுகள் மீட்பு ;கொடூரதந்தை தலைமறைவு
......................................
புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டார்:விரைவில் களம் திரும்புகிறார், யுவராஜ்சிங்
......................................
மைசூர் பல்கலைக்கழக மாணவியின் பாலியல் கொடுமை புகார்
......................................
கல்லூரி மாணவிகள் 2 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை
......................................
கோத்தபய ராஜபக்சே வேண்டுகோளை ஏற்றது இந்தியா
......................................
எம்.ஜி.ஆர். உறவினர் கொலை வழக்கு: மேலும் 2 அரசு சாட்சிகள் பல்டி
......................................
அதிமுக பிரமுகர் சுட்டுக்கொலை :விவசாயி கைது
......................................
நண்பனின் காதலியை மிரட்டி கற்பழித்த வாலிபர்கள் கைது
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 6, ஜூன் 2012 (10:11 IST)



கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள் துவங்கினால்
முதலீடு, பயிற்சி உள்ளிட்டவற்றில் மானியம்

கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மையங்கள் துவங்கினால், முதலீடு, பயிற்சி உள்ளிட்டவற்றில் மானியம், போக்குவரத்து வசதி ஆகியவை ஏற்படுத்தி தரப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின், கடந்த 2011-12 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தொழில் முனைவோர், கிராமப்புறங்களில் தங்கள் பி.பி.ஓ., மையங்களை அமைப்பது தொடர்பாக, பி.பி.ஓ., கொள்கை மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதன்படி, மேம்படுத்தப்பட்ட கிராமப்புற பி.பி.ஓ., கொள்கை வெளியிடப் பட்டுள்ளது.

வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள், அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கான சேவைகள், பெரும்பாலும், இந்தியாவில் உள்ள பி.பி.ஓ., நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப் படுகின்றன.
 
இந்த நிறுவனங்கள் அனைத்தும், வர்த்தகம் சார்ந்த முக்கிய பகுதிகளையே நோக்கி அமைந்துள்ளன. இப்பிரிவு மேலும் வளர, கிராமப் புறங்களில் இதற்கான சூழலை, அரசு ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியமாகிறது.


இதற்கென மேம்படுத்தப்பட்ட கிராமப்புற பி.பி.ஓ., கொள்கை-2012 உருவாக்கப் பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில், பி.பி.ஓ., மையங்கள் அமைக்கும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கிறது. மேலும், பி.பி.ஓ., நிறுவனங்கள், தொழில் முனைவோர், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு தேவையான கல்வியறிவு அளிக்கும் கல்வி நிறுவனங்களை துவங்கவும் வழி செய்கிறது.


இந்த கொள்கையின்படி, மாநில தகவல் தொழில்நுட்பத் துறை, கிராமப்புறங்களில் பி.பி.ஓ., மற்றும் கல்வி நிறுவனங்களை அமைக்கும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.

கிராமப்புறங்களில் தனியாரால் அமைக்கப்படும், பி.பி.ஓ.,க்களுக்கான இடம், மின்சாரம் மற்றும் தொடர்பியல் வசதிகளை, தகவல் தொழில்நுட்பத் துறையே அளிக்கும்.இத்துறை, தொழில் முனைவோருக்கும், பி.பி.ஓ., மையங்கள், கல்வி நிறுவனங்களை அமைக்கும் பெரிய நிறுவனங் களுக்கும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, துறை சார்ந்த தொழில்முனைவோருடன் தொடர்பு ஏற்படுத்தி, எதிர்கால திட்டத்தை வளர்க்க உதவுகிறது. மேலும், கிராமப்புறங்களில் சொந்த இடம் அல்லது வாடகை இடத்தில், பி.பி.ஓ., மையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு, மேம்படுத்தப்பட்ட புதிய பி.பி.ஓ., கொள்கையின் படி, மானியமும் வழங்கப்படுகிறது.


இதன்படி, கிராமப்புறங்களில், 50 பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு துவக்கப்படும் பி.பி.ஓ., மையங் களுக்கு, அடிப்படை முதலீட்டில், 20 சதவீதம், அதாவது அதிகபட்சமாக, ஐந்து லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப் படுகிறது.

புதிய பி.பி.ஓ.,க்கள் துவக்கப்படும் போது, தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேவைப்படுவதால், அவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சியளிக்க, மாதம் ஒன்றுக்கு, 1,500 ரூபாய், பயிற்சிக்கான மானியம் வழங்கப் படுகிறது.

இதன் மூலம், ஒரு பி.பி.ஓ.,வில் பணியில் சேரும், 50 பேருக்கு, 2.25 லட்ச ரூபாய் வரை செலவிடப் படுகிறது. மேலும், கிராமப்புற பி.பி.ஓ.,வில் பணியாற்றுபவர்களுக்கு, அடிப்படை போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த பி.பி.ஓ.,க்களை அமைக்கும் நிறுவனங்களுக்கான மானியத்தை, எல்காட் நிறுவனம் வழங்கும். ஊராட்சிகளில், பி.பி.ஓ., அமைக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து, தகுதியுள்ள நிறுவனங்களை இறுதி செய்து, மானியத்தை இந்த நிறுவனம் வழங்கும்.
 
பி.பி.ஓ.,க்களில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியை ஐ.சி.டி., அகடமி மேற்கொள்கிறது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை, இந்த நிறுவனம் பணியாளர்களுக்கு வழங்கும். நவீன மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சிகளையும், இந்த நிறுவனம் வழங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :