எலிசபெத் கணவருக்கு உடல்நலக் குறைவு
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப். வயது 90. இவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுநீரக பை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் எலிசபெத் ராணியாக முடிசூட்டப்பட்ட 60&ம் ஆண்டு விழா நேற்று லண்டனில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிலிப் பங்கேற்க முடியவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் விழாவில் ராணி பங்கேற்றார். விழாவில் முக்கிய பிரமுகர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.