திருமணமான 5 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை
கோவை ரத்தினபுரி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் கண்ணன்(39). கண்ணப்பன்நகரில் தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வந்தார். இவருக்கும் கிணத்துக்கடவு சிங்கையன்புதூரை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 30ம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில், நேற்று கவுண்டம்பாளையத்தில் இருந்து டிவிஎஸ் நகர் செல்லும் சாலையில் ஒரு கோயில் அருகே கண்ணன் மயங்கி கிடந்தார். முன்னதாக மனைவிக்கு போன் செய்த கண்ணன், தான் விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார். பதறியடித் துக்கொண்டு குடும்பத்தினர் அங்கு வந்தனர்.
மயங்கி கிடந்த கண்ணனை மருத்துவமனையில் சேர்த் தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் இறந்தார். தாயுடன் தகராறு காரணமாக கொசு மருந்து குடித்து அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.