சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை தலைமை நீதிமன்றத்தில், நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை முடியும்வரை வழக்கின் விசாரணையை தடை செய்ய வேண்டுமென கோரி சென்னை ஐகோர்ட்டில் சங்கரராமனின் மனைவி பத்மா மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு புதுவை கோர்ட்டில் இன்றைய தேதிக்கு நீதிபதி முருகன் ஒத்திவைத்தார். இன்றைய விசாரணையின்போது பத்மா மற்றும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. பத்மாவின் உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்ற த்திற்கு வர இயலவில்லை என சங்கரரா மனின் மகன் தெரிவித்தார்.
இந்த வழக்கில் காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் விஜயேந்திர சரஸ்வதி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களோடு சேர்ந்து 24 குற்றவாளிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் இன்றைய விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 8-ந்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய விசாரணையின்போது குற்றவாளிகள் அனைவரும் தவறாமல் ஆஜராக வேண்டும் என கூறினார்.