கை, கால்களை கட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் சொத்தை அபகரிக்க, பெண்ணை கடத்திச் சென்று, கை கால்களை கட்டி ஆற்றில் வீசி எறிந்த கொடூர சம் பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. வலியால் ஆற்றின் கரையில் துடித்த பெண்ணை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம் பெனாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேபதி சாகு, 53. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை தூக்கிச் சென்று, காரில் போட்டு கடத்திச் சென்றதோடு, அடித்தும் கொடுமைப்படுத்தியது. பின்னர் ரேபதி சாகுவின் கை, கால்களை கட்டிய கும்பல், பிருபா ஆற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசி விட்டு ஓடியது.
மறுநாள் காலையில், பலத்த காயங்களுடன் ஆற்றின் கரையோரத்தில் வலியால் துடித்துக் கொண்டிருந்த ரேபதி சாகுவைப் பார்த்த சிலர், போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு, கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி.கல்லூரி மருத்துவமனையில் சேர்த் தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து, ரேபதி சாகு போலீசாரிடம்,
’’நான், 31ம் தேதி இரவு வீட்டின் வராந்தாவில் படுத்துறங்கியபோது, நள்ளிரவு அதே பகுதியைச் சேர்ந்த பூபனா சாகு, சாந்தா சாகு மற்றும் சங்கர் சேதி என்ற மூன்று பேர் என் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் என்னை வலுக் கட்டா யமாக தூக்கி, காரில் தள்ளி கடத்தினர். என் வாயை துணியால் அடைத்து, என்னை அவர்கள் அடித்து உதைத்தனர். என் கை, கால்களை கட்டினர். பின்னர் பிருபா பாலத்தில் இருந்து ஆற்றில் தூக்கி வீசி எறிந்தனர். அவர்கள் எனது சொத்தை கைப்பற்ற முயற்சித்தனர். அதற்காக என்னை கொல்லவும் முயன்றனர். அதை நான் தடுத்ததால், என்னை இவ்வாறு செய்துள்ளனர்.’’என்று தெரிவித்துள்ளார்.