பெரம்பலூர் : கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை பெரம்பலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்தவர் இளமதி. இவரது மகன் மணிகண்டன்(20). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த வாரம் வெளியான செமஸ்டர் தேர்வில் 4பாடங்களில் மணிகண்டன் தோல்வி அடைந் துள்ளார். இதனையடுத்து மே 31ம் தேதியில் மணிகண்டன் காணாமல் போனதால் பெற்றோர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் இன்ஜினியரிங் கல்லூரிக்கு அருகில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றின் விடுதியில் மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள இந்த மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.