இந்திய நீச்சல் வீரர்களுக்கு ஜெர்மனியில் பயிற்சி
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்காக 3 பேர் கொண்ட இந்திய நீச்சல் அணி ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ள ஒலிம்பிக் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி வீரர்கள் விர்தவால் காதே, சந்தீப் செஜ்வால் மற்றும் பயிற்சியாளர் நிஹார் அமீர் ஆகியோர் கொண்ட இந்திய அணி வருகிற 1ந் தேதி முதல் ஜுலை 24ந் தேதி வரை ஜெர்மனியில் பயிற்சியில் ஈடுபடும். இதற்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்.