குடிகார தந்தையை கொலை செய்த மாணவன்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சுந்தர ராஜா பெருமாள் புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் செங்கல் சூளை தொழிலாளி இவருக்கு 2 மகன்கள் 2 மகள்கள் . இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது சம்பவத்தன்று குடித்து விட்டு வந்து ராஜேந்திரன் வீட்டில் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன் கார்த்திக் தந்தையை அரிவாளால் வெட்டினான். இதில் அதே இடத்தில் ராஜேந்திரன் பலியானார். இதைதொடர்ந்து கார்த்திக் தலைமறைவானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்ர்கள். கார்த்திக் பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தார் எனபது குறிப்பிடதக்கது.