விமான விபத்து : கும்பகோணம் பட்டாட்சாரியார் பரிதாப பலி !
கும்பகோணம் அய்யங்கார் தெருவினை சேர்ந்த சுதா (எ) சுதர்சன் பட்டாட்சார் (45) கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி திருக்கோயில், சக்கரபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ ராமசாமி திருக்கோயில் ஆகியவற்றில் நித்ய பூஜைகள் செய்யும் பரம்பரை பட்டாட்சாரியார் ஆவார் இவர் கடந்த 10ம் தேதி வியாழக்கிழமை வட மாநிலங்களில் உள்ள 108 வைணவ தேச திருத்தலங்களை தரிசனம் செய்ய புறப்பட்டார்.
இதில் அயோத்தி உள்ளிட்ட சில தலங்களை தரிசனம் செய்த பின்னர் இன்று நேப்பாள் தலைநகர் காத்மண்ட்டில் இருந்து 16 பேர் கொண்ட குழுவினராக சிறிய ரக விமானம் மூலம் சாலிகிராம் எனும் முக்திநாத்திற்கு சென்ற போது வானிலை மோசமாக இருந்த நிலையில் பலமான காற்று அடித்ததால் விமானம் தரை இறங்கும் சமயத்தில் நிலை குலைந்து எதிரில் இருந்த மலையில் மோதி அருகில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளானது .
இதில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்தனர். இதில் இதுவரை 9 பேரின் உடல் மட்டும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் சுதர்சன் பட்டாட்சாரும் ஒருவர் திருக்கோயில் பட்டாட்சார் ஒருவர் 108 திவ்ய தேச தரிசனத்திற்காக சென்றபோது விமான விபத்தில் சிக்கி பலியாகி இருக்கும் சம்பவம் இன்று மாலை கும்பகோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் பலியான சுதர்சனுக்கு சாந்தி என்ற மனைவியும், அமுதப்பரியா என்ற +2 பயிலும் மகளும், ஸ்ரீரங்கம் வேதப்பாடசாலையில் வேதம் பயிலும் ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.