மும்பை இந்தியன்ஸ் வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 62 வது ஆட்டம் பெங்களூரில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வீரர்கள் தில்ஷான் (47), அகர்வால் (64), சவுரப் திவாரி (21) ரன்கள் எடுத்தனர். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களில் ராயுடு (81), பொல்லார்டு (52) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தனர். எனவே, மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.