விஜயகாந்த் டிவியில் 'கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்'...!
கேப்டன் டிவியில் கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
எல்லாம் அவன் செயல் படத்தில் வக்கீல் வண்டு முருகனாக வருவார் வடிவேலு. அதில் வரும் நீதிமன்றக் காட்சியில், எதிர்த் தரப்பு வக்கீல் புள்ளிவிவரத்தோடு வாதாடுவதைப் பார்த்து கடுப்பாகி கத்துவார்.
பின்னர் கடுப்பேத்துறான் யுவர் ஆனர் என்று பேசுவார். வடிவேலுவின் வசனம் உலக அளவில் பெரும் புகழைப் பெற்றது. ஃபேஸ்புக்கிலும் இந்த வசனம் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில் கேப்டன் டிவியில் இந்த தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நகைச்சுவை கலந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.