ஏர்இந்தியா நிறுவனத்திற்கு ரூ.96 கோடி இழப்பு!
7வது நாளாக போராட்டம் நடத்தி வரும் ஏர் இந்தியா விமான தொழிலாளர்களால் இன்றும் 13 ஏர் இந்தியா விமானங்கள் ரத்தாகின. டில்லி, மும்பை மற்றும் நியூயார்க்கிலிருந்து இயக்கப்படும் விமானங்கள் ரத்தாவதால் 9 சர்வதேச விமானங்களும் 4 உள்ளூர் விமான சர்வீஸ்களும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா தொழிலாளர்களின் பிரச்சினை வலுக்கிறது.
இதனால் ஏற்கனவே பெரும் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஏர்இந்தியா நிறுவனத்திற்கு தற்போது மேலும் ரூ.96 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவது குறித்து ஏர்இந்தியா நிர்வாகம் எந்த ஒரு முடிவுக்கும் வராத நிலையில் ஏர்இந்தியா விமானிகளுக்கு ஆதரவு அளிப்பதாக ஏர் இந்தியாவின் விமானிகள் நிர்வாக கழகமும், ஜெட் ஏர்வேஸ் விமானிகள் கழகமும் தெரிவித்துள்ளன.