சென்னையில் இரண்டு பெண்களிடம் வழிப்பறி
சென்னையில் இரண்டு பெண்களிடம் மர்ம நபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
அடையாறு காந்திநகரைச் சேர்ந்தவர் ரா. கஸ்தூரி (59). தனது வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை நடந்துச் சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், அவர் கழுத்தில் கிடந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம்.
மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கம்மாள் (66). இவர் சனிக்கிழமை மாலை அப் பகுதியில் நடந்து வந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் இரு மர்ம நபர்கள் சொக்கம்மாள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினராம். வழிப்பறி செய்யப்பட்ட தங்கச் சங்கிலியின் மதிப்பு ரூ. 1.5 லட்சம் என்று கூறப்படுகிறது.