அம்பேத்கர் கார்ட்டூன் விவகாரம்: 2 பாடநூல் ஆலோசகர்கள் ராஜினாமா
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை சேர்ந்த பாடநூல் ஆலோசகர்களான யோகேந்திர யாதவ் மற்றும் சுகாஸ் பாலசிகார் ஆகியோர் பாடபுத்தகங்களில் அம்பேத்கர் கார்ட்டூன் படம் வெளிவந்தது தொடர்பான விவகாரத்தை தொடர்ந்து தங்களது பதவியினை ராஜினாமா செய்தனர்.