அண்மைச் செய்திகள்
ஐபிஎல் 6: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி || கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்! || சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்! || சேலம்-கரூர் ரெயில் பாதையில் 25-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கம் || சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு (படங்கள்) || ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத் || இலங்கை பிரச்சனையில் வசூல் வேட்டையில் ஈடுபடும் சில கட்சிகள் குற்றம்சாட்டுகிறது: நாராயணசாமி || டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பொய்த்துப்போகும் நிலை: கலைஞர் வேதனை || ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித் || பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு || சென்னையில் 35 பவுன் நகை திருட்டு || தனியார் வங்கி முகவர்களை நிறுத்தக் கோரி ஆர்பாட்டம் (படம்) || மகப்பேறு மருத்துவமனையின் அவலம்! (படங்கள்) ||
வெள்ளிக்கிழமை, 11, மே 2012
துப்பாக்கி காட்டி மிரட்டிய திமுக பிரமுகர் கைது
......................................
சிதம்பரம் : வேன் மோதி 2 பேர் பலி
......................................
அம்பேத்கர் கார்ட்டூன் விவகாரம்: 2 பாடநூல் ஆலோசகர்கள் ராஜினாமா
......................................
தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 6 பேர் லண்டன் பயணம்
......................................
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை
......................................
தஞ்சை தமிழ்பல்கலை : ராஜனாமா செய்த துணைவேந்தர் மீண்டும் பொறுப்பேற்றார்
......................................
திமுக முடிவை மறுபரிசீலணை செய்ய வேண்டும் : கலைஞருக்கு கட்சி தொண்டர்கள் கடிதம்
......................................
மதுரை கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் பிடிபட்டார்
......................................
சசிகலா நடராஜனை பத்திரிகையாளர்களை சந்திக்க விடாமல் செய்த சதி - சக்தி எது?
......................................
தபால் அலுவலகங்களில் வங்கிகள் தொடங்க முடிவு
......................................
சசிகலா நடராஜன் திருச்சி சிறையிலிருந்து விடுதலை
......................................
மருமகள் கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த மாமனார் பலி
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் புழல் சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்?
......................................
செக்ஸ் கொடுமை : 94 சிறுவர்-சிறுமிகள் மீட்பு
......................................
தந்தை செல்போனை பறித்ததால் மகள் தீக்குளித்து தற்கொலை
......................................
மகளின் திருமணத்தை நடத்த பணம் கிடைக்காததால் தந்தை தற்கொலை
......................................
பிளஸ் 2 மாணவியிடம் உல்லாசம் : ஆசிரியர் மீது 6 பிரிவுகளில் வழக்கு
......................................
குட்டை முடி ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர் மரணம்
......................................
இந்திய பணிப்பெண் மலேசியாவில் தற்கொலை
......................................
ஜனார்தன ரெட்டிக்கு ஜாமீன்
......................................
ஈழத்தமிழர்கள் விவகாரம் :சுஷ்மா சுவராஜ்க்கு பழ.நெடுமாறன் கண்டனம்
......................................
சி.பி.எஸ்.சி. பாடப்புத்தகத்திலிருந்து அம்பேத்கர் கேலிச்சித்திரம் மாற்றப்படுகிறது!
......................................
கூடங்குளத்தில் அதிரடி : உண்ணாவிரதமிருந்த அனைத்து பெண்களும் திடீர் விலகல்!
......................................
ஆ. ராசாவின் ஜாமீனுக்கு சி.பி.ஐ. எதிர்ப்பு
......................................
சென்னை : ரேசன் கடை புகார்களை தெரிவிக்க சிறப்பு முகாம்
......................................
அம்பேத்கர் குறித்து கார்ட்டூன்: மக்களவையில் திருமாவளவன் எதிர்ப்பு
......................................
இலங்கை தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லையா? சுஷ்மாவுக்கு சீமான் கண்டனம்
......................................
சில்க் ஸ்மிதா வேடத்தில் நயன்தாரா?
......................................
ஜெயேந்திரருக்கு என்னைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை! கோர்ட்டில் ரஞ்சிதா மனு!
......................................
சென்னையைச் சேர்ந்த கப்பல் கேப்டன் கடத்தி கொலை: திருவண்ணாமலை அருகே உடல் கண்டுபிடிப்பு
......................................
விமானக் கட்டணத்தை உயர்த்தாதீர்கள்: பிரதமர்
......................................
இரண்டு தடவை சினேகாவுக்கு தாலி கட்டிய பிரசன்னா
......................................
ஒரு மாதத்திற்கு பிறகு விஜயகாந்த் சட்டசபைக்கு வந்தார்
......................................
புதுக்கோட்டையில் போட்டியில்லை: தமிழக பாஜக
......................................
ஏர் இந்தியா விமானிகள் போராட்டம்: பிரதமரைச் சந்திக்கிறார் அஜித்சிங்
......................................
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் 12 விமான சேவை ரத்து
......................................
பொறியியல் விண்ணப்பம் வழங்கும் இடங்கள்
......................................
ஜுலை 9ல் பொறியியல் பொதுக் கலந்தாய்வு
......................................
தே.மு.தி.க. எம்.எல்.ஏ.,மீதான சஸ்பெண்ட் ரத்து
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் யார்?
......................................
புதுக்கோட்டை இடைத்தேர்த்லில் அதிமுக தேமுதிக நேரடி போட்டி!
......................................
புதுக்கோட்டை தொகுதியில் தேமுதிக போட்டி! விஜயகாந்த் அறிவிப்பு!
......................................
டிக்கெட் வாங்காமல் ரயிலில் பயணம்: ரூ.477 கோடி அபராதம்!
......................................
இலங்கையை சுற்றி பார்க்க செல்லவில்லை: சுஷ்மா
......................................
மானாமதுரை: லாரி வேன் மோதியதில் 2 பேர் பலி
......................................
இளைய ஆதீனமாக நித்தி நியமனம்! மதுரை ஆதீனத்தை கண்டித்து சீர்காழி நகரசபை கூட்டத்தில் தீர்மானம்!
......................................
பெண்கள் பெட்டியில் பயணித்தவருக்கு அடி உதை! ஆஸ்பத்திரியில் சிகிச்சை! அரக்கோணத்தில் பரபரப்பு!
......................................
ஓடும் ரெயிலில் மனைவி திடீர் மாயம்! புகார் குறித்து போலீசார் விசாரணை!
......................................
இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்! பாஜக மாநாட்டில் தீர்மானம்!
......................................
பாஜக ஆட்சியை பிடிக்கும்: கட்காரி நம்பிக்கை
......................................
சகோதர உறவு இருக்க முடியாது என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அறிவுறுத்தினேன்: கட்காரி
......................................
கெட்ட காலம் தொடங்கி விட்டது! மதுரையில் நிதின்கட்காரி பேச்சு!
......................................
பால் விலை உயர்வு, பஸ், மின் கட்டண உயர்வு ஆகியவையெல்லாம் தேவை தானா? கலைஞர் அறிக்கை!
......................................
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
......................................
ஐ.சி.சி. புதிய செயல் அதிகாரியாக டேவ் ரிச்சர்ட்சன் நியமிக்கப்படுகிறார்
......................................
சச்சினுக்கு தங்க பேட் வழங்குகிறார் மம்தா
......................................
உலக செஸ் போட்டி தொடக்கம்
......................................
ஐ.பி.எல்.: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 11, மே 2012 (14:57 IST)




இலங்கை தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லையா? சுஷ்மாவுக்கு சீமான் கண்டனம்

இலங்கைத் தமிழர்கள் தனித் தமிழீழத்தை விரும்பவில்லை என்று பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரையில் நடந்த தாமரை சங்கமம் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ், இலங்கைத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை என்று பேசியுள்ளார்.

இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவிற்கு தலைமை வகித்துச் சென்ற சுஷ்மா சுவராஜ், இலங்கையில் உள்ள தமிழர்கள், தமிழர் கட்சியினர் என அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றபட்ட இலங்கை தேவை என்று கூறும்போது, இங்குள்ள கட்சிகள் மட்டும் ஏன் தனி ஈழம் கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

இலங்கைக்கு 5 நாள் பயணமாக சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் நோக்கம், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படுகிறதா, இந்திய அரசு அளித்த உதவிகள் அவர்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளவே தவிர, தமிழர்களின் அரசியல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதல்ல.

ஆனால் தமிழர்களின் நிலை அங்கு எப்படியிருக்கிறது, எந்த அளவிற்கு அங்கு இராணுவத்தின் அடக்குமுறை இன்றும் தொடர்கிறது, தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டு, தமிழர் பகுதிகள் சிங்கள காலனிகளாக மாற்றப்படுகின்றனவே, இராணுவ ஆக்கிரமிப்பினால் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனரே என்று தமிழர்கள் கூறியதையெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும் தங்கள் மாநாட்டில் பேசாத சுஷ்மா சுவராஜ், அவர்களின் அரசியல் விருப்பம் தனித் தமிழ் ஈழம் அல்ல என்பதை மட்டும் அழுத்தமாக கூற முற்படுவது ஏன்?

தமிழர் பகுதிகளில் ஒரிரு நாட்கள் மட்டும் பயணம் செய்து ஒரிரு மணி நேரங்கள் மட்டும் சில தமிழர்களிடம் பேசிவிட்டு, அவர்கள் விரும்புவது தனித் தமிழ் ஈழம் அல்ல என்று சுஷ்மா பேசிகிறார் என்றால், அவர் தமிழர்களின் விருப்பத்தை விட, தமிழ் ஈழம் தொடர்பான தங்களின் நிலைப்பாட்டையும், ராஜபட்சவின் விருப்பதையும்தான் பேசியுள்ளார்.

தங்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலை இயக்கத்தை அழித்தொழிக்க, பாதுகாப்பு வளையத்தில் தஞ்சமடைந்திருந்த தங்கள் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்களான கொத்துக் குண்டுகள், வெப்பக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், இரசாயணக் குண்டுகள் ஆகியவற்றை போட்டு கொத்துக் கொத்தாக தங்கள் சொந்தங்களை ஈவிருக்கமின்றி அழித்த இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா? இரண்டரையாண்டுக் காலப் போரில் தங்கள் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை திட்டமிட்டு இனப் படுகொலை செய்து, தங்கள் சகோதரிகள் ஒரு லட்சம் பேரை விதவையாக்கி, வாழ வழியற்ற நிலையை ஏற்படுத்திய இனவெறி இலங்கை அரசுடன் இணைந்து வாழ ஈழத் தமிழர்கள் விரும்புகிறார்களா? அரை நூற்றாண்டுக் காலமாக ராணுவத்தை பயன்படுத்தி தங்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் கட்டவிழ்த்துவிட்ட அரசுடன் இணைந்து வாழ்வதே தங்களுக்குப் பாதுகாப்பு என்று சுஷ்மாவிடம் எங்களது தமிழ்ச் சொந்தங்கள் கூறினரா? எவ்வளவு பெரிய பொய்யை கூச்சமின்றிப் பேசுகிறார் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்.

இலங்கைத் தமிழர்களின் விருப்பம் தனித் தமிழ் ஈழமல்ல என்று கூறும் சுஷ்மா சுவராஜூம், அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் இலங்கைத் தமிழர்களின் முடிவை அறிய அங்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பத் தயாரா என்று நாங்கள் கேட்கிறோம்.

இன்று, நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே உலக நாடுகளுக்கும், ஐ.நா.விற்கும் தமிழினம் விடுக்கும் கோரிக்கை இதுவே. அதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி முன் வைக்குமா? என்று கேட்கிறோம்.


அப்படிச் செய்தால் அது அறிவு நாணயமுடைய செயலாக இருக்கும். ஒரிரு மணி நேரங்கள் மட்டும் அங்குள்ள தமிழர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்து அவர்கள் தமிழீழ தனி நாட்டை ஏற்கவில்லை என்று கூறுவது இந்திய, இலங்கை அரசுகளின் இரகசியத் திட்டத்தையே பிரதிபலிக்கிறதே தவிர, உண்மையை அல்ல.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, தங்கள் இனத்தை அழித்த இலங்கை அரசின் மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், அதன் மூலம் தங்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழினம் உலகளாவிய அளவில் போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தில் இருந்து தமிழினம் ஒரு போதும் பின்வாங்காது. தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்காமல், எத்தனை மாநாடுகள் போட்டாலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளராது.

தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை இந்திய நாடாளுமன்றக் கருவூலத்திற்கு அளித்துவிட்டதாகக் கூறுகிறார் சுஷ்மா சுவராஜ். இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சென்ற உங்களுக்கு தமிழினத்தை அழித்தொழித்த ராஜபட்ச எதற்காக பரிசுப் பொருட்களை வழங்க வேண்டும்? அதனை எதற்காக நீங்கள் பெற்றுக்கொண்டு வரவேண்டும்? உங்களுக்குப் பரிசுப் பொருட்களை ராஜபட்ச அளிக்கிறார் என்றால், நீங்கள் தமிழர்களுடைய சகோதரியா அல்லது ராஜபட்சவின் அறிவிக்கப்படாத தூதரா? தமிழினப் படுகொலை செய்த குற்றத்திற்காக உலகின் முன் ராஜபட்ச கும்பல் நடுநடுங்கி நின்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மார்க்சிஸ்ட் கட்சிகள் மட்டும் ராஜபட்ச அரசை தூக்கி பிடித்துக்கொண்டு, தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை கொச்சைபடுத்தி வருகின்றன. இது கண்டனத்திற்குரியது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : nageswaran Date :5/12/2012 9:22:11 PM
Pa.Si.Ramachandran,Sr,journalist,அவர்களே ஈழதமிழர்களுக்கு என்னதான் வழி.அவர்கள் அங்கே செத்து மடியத்தான் வேண்டுமா?Mr.Bala வின் கருத்தும் உண்மைதானே.
Name : bala Date :5/11/2012 5:13:23 PM
சீமான் சொல்லுவது சரி அம்மா அவர்கள் உங்களுக்கு தமிழ் ஈழம் தான் தேவை என்று சொன்னால் நீங்கள் போன பின்பு வெள்ளை வான் வந்து கடத்தி போகும் அது தெரியுமா உங்களுக்கு உதை சொல்லவா அங்கு வந்தீர்கள்
Name : Pa.Si. Ramachandran, Sr.Journalist Country : India Date :5/11/2012 5:10:45 PM
மிகப்பெரிய அரசியல்வாதியும் தினத்தந்தியின் ஸ்தாபகருமான சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் எனும் கட்சியின் பெயரை சுவீகரித்துக்கொண்டு கட்சி நடத்தும் சீமானுக்கு சினிமா சரிவரவில்லை என்று அரசியலுக்கு வந்துவிட்டு இப்போது அரசியலிலும் அரைவேக்காட்டுதனமாக நடந்துக்கொள்கிறார்.திராவிடநாடு கேட்ட அண்ணாவைவிடவும் தனிதமிழ்நாடு கேட்ட பெரியாருமே த்ழ்மிழர்கள் மத்தியில் ஜெயிக்க்காதபோது அதுவும் பிரபாகரனும் கொல்லபபட்டபிறகு அங்குள்ள இலங்கை தமிழர்களால் வெற்றிபெற முடியுமா? இங்கிருந்து குரல் கொடுப்பவர்கள் யாழ்பாணம் சென்று குரல் கொடுத்துப்பார்க்கட்டுமே? செல்வாவும் அமிர்தலிங்கமும் கேட்காத ஒன்றை இங்குள்ள தலைவர்களால் மட்டும் வாங்கிக்கொடுதுவிட முடியுமா? இங்குள்ளவர்கள் பேசப்பேச அங்குள்ள தமிழன் சாகிறான்.
Name : nageswaran Date :5/11/2012 4:28:26 PM
இந்தியாவின் தமிழர்களை தவிர மற்ற ஜாதியினர் ஈழதமிழர்களுக்கு துரோகம்தான் செய்கிறார்கள்.பின் ஏன் தமிழன் இந்தியம் என்ற ஒரு துரோகத்துடன் சேர்ந்து இருக்க வேண்டும்.தமிழா உனக்கு உலகத்தில் ஒரு நாட்டை உருவாக்கு ,உலக தமிழர்களை கப்பாட்று .
Name : kappalkumar Date :5/11/2012 3:37:16 PM
நல்ல சூடு சுஷ்மாவுக்கு சீமான் கொடுத்த சவுக்கடி