சாலையை கடக்க முயன்ற தந்தை மகள் பலி!
திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற தந்தை மகளும் கார் மோதி பலியாயினர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, அம்பாதுரை அருகே நான்குவழிச்சாலையின் குறுக்கே முருகன் (50), இவரது மகள் கல்லூரி மாணவி ராஜலெட்சுமி (21) ஆகியோர் கடக்க முயன்றுள்ளனர்.
அப்போது சாலையில் வேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியதில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். அம்பாதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.