ஜனாதிபதி தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்? :நாராயணசாமி பதில் மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’ஜனாதிபதி தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இது தொடர்பாக கூட்டணி கட்சியினருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் முடிவு செய்வார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்சார உற்பத்திக்கான பணிகள் தயார் நிலையில் உள்ளது. அங்கு விரைவில் உற்பத்தி தொடங்கும்’’ என்று கூறினார்.