ஏரி உடைந்து விபத்து: 10 பேர் பலி
நேபாளத்தின் கஸ்கி மாவட்டத்தில் உள்ள ஏரி ஒன்று உடைந்து சித்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அருகில் இருந்த கிராமங்களின் வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர் அவர்களது உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உள்பட பலரை காணவில்லை. போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.