ஐகோர்ட் வளாகத்தில் வாலிபர் தற்கொலை சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் உள்ளே செல்லும் வழியில் உள்ள மரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஊழியர்கள் ஐகோர்ட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வாலிபரின் பிணத்தை இறக்கி விசாரணை மேற்கொண்டனர். இதில் தற்கொலை செய்த வாலிபர் மெட்ரோ ரயில் பணிக்காக மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை வந்தார் என தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. ஐகோர்ட் வளாகத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும் சூழலில் அங்கு எப்படி வளாகத்திற்குள் தற்கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.