சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றவே விரும்புகிறேன்: அலெக்ஸ் பால்மேனன்
தொடர்ந்து சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றவே விரும்புகிறேன் என்று அலெக்ஸ் பால் மேனன் தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து விடுதலையான சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் 03.05.2012 அன்று சிந்தல்னார் என்ற இடத்துக்கு மாவோயிஸ்டுகளின் தூதர்கள் பி.டி. சர்மா, பேராசிரியர் ஜி.ஹர்கோபால் ஆகியோருடன் வந்து சேர்ந்தார்.
அலெக்ஸ் பால் மேனன் கூறியதாவது:
நான் தொடர்ந்து சுக்மா மாவட்ட கலெக்டராகவே பணியாற்ற விரும்புகிறேன். மாவோயிஸ்டுகள் என்னை கடத்தியதால் சுக்மாவை விட்டு போக மாட்டேன். மாவோயிஸ்டுகள் என்னை கடத்தியதை ஒரு கறுப்பு நிகழ்ச்சியாகவே கருதுகிறேன். அதை பெரிது படுத்த விரும்ப வில்லை.
என் விடுதலைக்காக பாடுபட்ட முதல் மந்திரி ராமன் சிங் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அலெக்ஸ் பால் மேனனை சுக்மா மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து விடுவித்து வேறு இலாகாவுக்கு மாற்றியதாக தகவல் வெளியானது. ஆனால், இதை முதல் மந்திரி ராமன் சிங் மறுத்தார். அலெக்ஸ் பால் மேனன் சுக்மா மாவட்ட கலெக்டராக தொடர்ந்து நீடிப்பார் என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.