பாபர் மசூதி இடிப்பு வழக்கு: 25-ல் விசாரணை
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி கரசேவகர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் எல்.கே.அத்வானி, சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, ரிதம்பாரா, வினய் கத்தியார், அசோக் சிங்கால், பிரவீன் தொகாடியா, உமா பாரதி மற்றும் பலர் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டை சுமத்தி இருந்தது.
இவர்கள் மீதான குற்றச்சதி குற்றச்சாட்டை சமீபத்தில் அலகாபாத் ஐகோர்ட் விடுவித்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ., சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் எச்.எல்.டாட்டு, சி.கே.பிரசாத் ஆகியோர் ஜுலை 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.