அரசியல்வாதிதான் அடுத்த ஜனாதிபதி ஆக வேண்டும்: முலாயம் சிங் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி எந்த ஒரு சமூகத்தையும் அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படக் கூடாது எனவும் அவர் பின்தங்கிய சமூகம், சிறுபான்மை சமூகம் உள்பட எந்த பாகுபாடும் பார்க்கக்கூடாது எனவும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். மம்தாவுடனான அவரது சந்திப்பு பற்றி கேட்டதற்கு, ‘இது எங்களுக்கு முதல் சந்திப்பு அல்ல. இரண்டு கட்சியினர் சந்திக்கும்போது அவர்கள் அரசியல் குறித்து பேசலாம். விரைவில் இந்த சந்திப்பில் விவாதிக் கப்பட்ட விஷயங்கள் பற்றி வெளிப்படையாக அறிவிப்போம். ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி உள்பட யார் பெயரும் இதுவரை அறிவிக்கப்பட்டதாக எனக்கு தெரி யாது. அதுபற்றி யாரும் என்னிடம் கூறவும் இல்லை. ஆனால் அடுத்த ஜனாதிபதி நிச்சயம் ஒரு அரசியல்வாதியாக இருக்க வேண்டும்’ என முலாயம்சிங் பதிலளித்தார். முலாயம்சிங்கின் இந்த பதிலால், அரசியல்வாதி அல்லாதவரான அப்துல் கலாம் ஜனாதிபதி ஆவதற்கு முலாயம் ஆதரவு அளிக்கமாட்டார் எனத் தெரிகிறது.