23 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு : 9 பேருக்கு தண்டனை
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு ரெயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கலவரம் நடந்தது. மாலவ் பகோல் பகுதியில் உள்ள ஒடே கிராமத்தில் 2 பெண்கள் உள்பட 23 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இவ்வழக்கில் இன்று தீர்வு அளிக்கப்பட்டது. 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி சரின் அறிவித்தார். 32 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.