கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் மாற்றம்
சத்தீஸ்கர் மாநில சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் கடந்த மாதம் 21 ந்தேதி மாவோயிஸ்டுகளால் கடத்தபட்டு நேற்று விடுதலை செய்யபட்டார். இந்த நிலையில் சுக்மா மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து அலெக்ஸ் பால் மேனன் மாற்றபட்டுள்ளார். சுக்மா மாவட்ட கலெக்டர் பொறுப்பை தண்டேவாடா கலெக்டர் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.