சுஷ்மா தலைமையில் இலங்கை சென்ற எம்.பி.க்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்பு!
பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஷ் தலைமையில் இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை சென்று அங்கு இந்தியா மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் குறித்து பார்வையிட்டனர். தமிழர்கள் மீண்டும் அவர்கள் பகுதியில் மறு குடியேற்றம் செய்வது குறித்தும் அப்பகுதியில் இருந்து ராணுவம் வெளியேற்ற பட வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சையுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியா திரும்பினர். இந்த குழு இன்று (04/05/2012) பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கையில் நடந்த பேச்சுவார்த்தை மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினர்.