பேருந்துகள் உரசல்! தாயின் மடியில் இருந்த குழந்தை மரணம்!
கோவை வெரைட்டி ஹால் ரோடு, திருமால் வீதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவரது மகள் அபினயஸ்ரீ (வயது 4). ஆசைத்தம்பி தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த 02.05.2012 அன்று நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
பின்னர், அங்கிருந்து குடும்பத்துடன் ஊட்டிக்கு சென்று பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். பிறகு மேட்டுப்பாளையம் அருகில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்த பின்னர் மேட்டுப்பாளையம் திரும்பினர்.
அங்கிருந்து கோவைக்கு ஒரு பேருந்தில் புறப்பட்டனர். அந்த பேருந்து பெரியநாயக்கன் பாளையம் அருகில் உள்ள பிரஸ் காலனி அருகே வந்து கொண்டிருந்தபோது கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்தும் ஆசைத்தம்பி குடும்பத்தினர் பயணம் செய்த அரசு பேருந்தும் பஸ்சும் பக்கவாட்டில் உரசிக் கொண்டன.
இந்த விபத்தில் பேருந்தின் வலது பக்க ஜன்னல் ஓரத்தில் தாயின் ம்டியில் அமர்ந்திருந்த அபினயஸ்ரீயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தை அபினயஸ்ரீயை ஆம்புலன்சில் ஏற்றி பக்கத்தில் உள்ள மருத்துவமானைக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியிலேயே தாயின் மடியில் படுத்திருந்த குழந்தை அபினயஸ்ரீயின் உயிர் பிரிந்தது. அபினயஸ்ரீயின் உடலைப் பார்த்து ஆசைத்தம்பியும், அவரது மனைவி மட்டுமல்ல அந்த பேருந்தில் பயணம் செய்த அனைவருமே கண்ணீர் சிந்தினôர்கள்.
ஆசைத்தம்பி தம்பதியினருக்கு ஒரே மகள் என்பதால் அபினயஸ்ரீயை அவர்கள் உயிருக்குயிராய் வளர்த்து வந்துள்ளனர்.
என்னகுறை வைத்தோம் எங்களை இப்படி தவிக்க விட்டு விட்டு சென்று விட்டாயே என கண்ணீர் சிந்தினர். அபினயஸ்ரீயை அடுத்த மாதம் எல்.கே.ஜி.யில் சேர்க்க இருந்தனர். அதற்காக பள்ளியில் பணம் கட்டி விட்டனர். மேலும் புத்தகங்கள் வாங்கியதோடு பள்ளி சீருடையும் தைத்து வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் அபினயஸ்ரீயின் தாயார் செல்வி, சொல்லிச் சொல்லி அழுதது அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இது குறித்து, பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.