கொல்கத்தா வீரர்களுக்கு பேச தடை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் கங்குலி தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. கங்குலி, கொல்கத்தாவின் அபிமான வீரர் என்பதால் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் அதீத ஆர்வமுடன் உள்ளனர். டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.
இந்த நிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆட்டம் தொடர்பாக கொல்கத்தா வீரர்கள் மீடியாக்களிடம் பேசக்கூடாது என்று அணி நிர்வாகம் திடீரென கட்டுப்பாடு விதித்துள்ளது.
வழக்கமாக மீடியாக்களிடம் பேச வீரர்களை ஏஜென்சிகள் ஏற்பாடுகள் செய்வார்கள். குறிப்பிட்ட வீரர்களை பேட்டி காண வேண்டும் என்ற மீடியாக்களின் வேண்டுகோளை கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இப்போது எந்த வீரர்களும் மீடியாக்களிடம் பேசுவதற்கு தயாராக இல்லை அல்லது நேரம் இல்லை என்று அணி நிர்வாகிகள் கூறி விட்டனர்' என்று ஏஜென்சி ஒருவர் தெரிவித்தார்.