சித்திரை முழுநிலவுநாளான மே 5-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னிய இளைஞர் விழாவில் கலந்துகொள்ளுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘’புதிய அரசியல், புதிய நம்பிக்கையுடன் நடைபோடுவதற்கான பாதை வகுப்பதற்காகவே மே 5-ம் தேதி சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரத்தில் நாம் கூடுகிறோம். 25 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் இந்த பெருவிழாவில் ஒவ்வொரு பாட்டாளி குடும்பத்தில் இருந்தும் ஓர் இளைஞன் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.
ஓட்டு போடுகிற, கொடி பிடிக்கிற, கோஷம் போடுகிற, இலவசங்களுக்கு கையேந்துகிற சாதியாக மாற்றியது மட்டுமின்றி திட்டமிட்டு குடிகார சாதியாய் மாற்றிய திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வன்னியர்களை வாழ வைப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவும், அதற்கான சூளுரையை ஏற்கவும் மாமல்லபுரத்தில் கூடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.