கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் ஆலோசனை
ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் பதவிக்காலம் ஜுலை 25 ந்தேதியுடன் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.
அதன்படி, கூட்டணி கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசனையை தொடங்கி உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை முடிந்த பிறகு, மற்ற கட்சிகளுடன் கலந்து பேசவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.