புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவில்லை என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். அவர் கார் விபத்தில் மரணமடைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுக திடீரென தனது வேட்பாளரை அறிவித்தது.
இதையடுத்து புதுக்கோட்டை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.